முகாமைத்துவம்

பொது அவை / பேரவை:

ஒவ்வொரு நாடுகளின் கல்வி கழகங்களின் இரண்டு பிரதிநிதிகளை (ஒருவர் இளையவராக இருக்க வேண்டும்)  கொண்ட அவையாகும். இரண்டு  வருடங்களுக்கு ஒரு தடவை நாடுகளால் உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 

நிர்வாகக்குழு / நிறைவேற்றுக்குழு:

பொது அவையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து அல்லது ஏழு (5 / 7) உறுப்பினர்களை கொண்டது நிர்வாகக் குழுவாகும். இதில் எல்லாக்கண்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் இருப்பார்கள். இரண்டு  வருடங்களுக்கு ஒரு தடவை உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 

ஒருங்கிணைப்பாளர் / முகாமைத்துவ  பணிப்பாளர்:

தகைமை மற்றும் அனுபவம் உள்ளவர் ஒருங்கிணைப்பாளராக நிர்வாகக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்.  அ.த.க.மே.பேரவையின் எல்லாச்  செயற்பாடுகளுக்குமான இணைப்பாளராக ஒருங்கிணைப்பாளர் இருப்பார். ஒருவருடைய பணிக்காலம் மூன்று (3) வருடங்கள் ஆகும்.  மற்றும் இரண்டு தடவையே  ஒருவர் ஒருங்கிணைப்பாளராக பணிசெய்ய முடியும். 

மதியுரைஞர் அவை:

நிர்வாகக்குழு மற்றும் ஒருங்கிணைப்பாளரால் எல்லா பிரிவுகளுக்கும் (உ+ம்: கல்வி, உயர் கல்வி,  தொழில்நுட்பம், தேர்வு) தகமை மற்றும் அனுபவம் உள்ளவர்கள் மதியுரைஞர்களாக இணைக்கப்பட்டுள்ளார்கள் மேலும் தேவைகளின் அடிப்படையில் இணைக்கப்படுவார்கள்.   

வெளியகக் கணக்காய்வாளர்:

ஐரோப்பிய நாடுகளால்  அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமே அ.த.க.மே. பேரவையின் நிதியறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கணக்காய்வு செய்து பொது அவை மற்றும் நிர்வாகக்குழுக்கு சமர்ப்பிக்கும். 

பணிப்பாளர் - கல்வி:

 1. பாடநூல் மற்றும் பாடத்திட்டம்
 2. கற்றல் மற்றும் கற்பித்தல் (பயிற்சி, பட்டறைகள்)
 3. கல்வி ஆய்வும் மேம்பாடும்

பணிப்பாளர் - உயர்கல்வி:

 1. ஆசிரியர்களுக்கான பட்டயக்கல்வி மற்றும் உயர் கல்வி
 2. இவற்றுக்கான பாடத்திட்ட உருவாக்கம் மற்றும் நூல்கள்

பணிப்பாளர் - நுண்கலை:

 1. நுண்கலைகளுக்கு தேவையான பாடநூல் மற்றும் பாடத்திட்டம்
 2. கற்றல் மற்றும் கற்பித்தல் (பயிற்சி, பட்டறைகள்)
 3. நுண்கலை ஆய்வும் மேம்பாடும்

தேர்வுகள் ஆணையாளர்:

 1. தமிழ்மொழிக் கல்விக்கான தேர்வுகளும் சான்றிதழ் வழங்கலும்
 2. நுண்கலைக்கான தேர்வுகளும் சான்றிதழ் வழங்கலும்

பணிப்பாளர் - வழங்கல்:

 1. நூல்கள் வழங்கல்
 2. விடைத்தாள்களைச் சேமித்து வைத்தல்
 3. அ.த.க.மே.பேரவையின் களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருத்தல்

பணிப்பாளர் - போட்டிகள் மற்றும் நிகழ்வுகள்:

 1. மொழி சார்ந்து அனைத்துலக மட்டத்தில் போட்டிகளை நடத்துதல்
 2. அனைத்துலக மட்டத்தில் கலை மற்றும் பண்பாட்டு  நிகழ்வுகளைச் செய்தல்
 3. மொழி சார்ந்த மகாநாடுகளை நடத்துதல்
 4. பட்டமளிப்பு விழாக்கள் செய்தல்
 5. அனைத்துலக மட்டத்தில் மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுக்களை நடாத்துதல்

பணிப்பாளர் - நிதி:

 1. அ.த.க.மே.பேரவையின் நிதி மற்றும் கணக்கறிக்கைகளை ஐரோப்பிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு அமைவாக தயார் செய்தல் மற்றும் செயற்படுத்துதல்.

அங்கீகாரக் குழு: 

 1. தமிழ் மொழிக்கான அங்கீகாரம் மற்றும் அ.த.க.மே.பேரவைக்கான கல்வியியல் நிறுவன அங்கீகாரம் பெறுதல்
 2. தேர்வுகளுக்கான  அங்கீகாரம் பெறுதல்

சட்ட அலகு / இணக்க அலகு:

 1. அ.த.க.மே.பேரவைக்கான கையேட்டை எழுதுதல் மற்றும் செற்பாடுகள் அதன் பிரகாரம் நடைபெறுகிறது என்பதை உறுதிசெய்தல்
 2. ஒவ்வொரு பிரிவுக்குமான  நடத்தை விதித் தொகுப்பை எழுதுதல் அதன் படி செற்பாடுகள் நடைபெறுகிறது என்பதை உறுதிசெய்தல்

தொழில்நுட்ப அலகு: 

 1. அ.த.க.மே.பேரவைக்கான அனைத்து இணையவழி உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பேணுதல்
 2. மாணவர்களுக்கான தமிழ் மொழிக்கான  கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்குதல்
 3. இணையத்தளம் மற்றும் செயலிகளை உருவாக்குதல் மற்றும் பேணுதல்

ஊடக அலகு: 

 1. அ.த.க.மே.பேரவை சார்ந்து ஊடங்களை சந்தித்தால் மற்றும் ஊடக அறிக்கைகளை வெளியிடுதல்
 2. சமூக மற்றும் இணையவழி தளங்களில் அ.த.க.மே.பேரவையின் கல்வியியல் மற்றும் இதர செற்பாடுகளை கொண்டுசெல்லல்
 3. அ.த.க.மே.பேரவையின் வெளியீடுகளை செய்தல்

கல்வி உதவி அலகு: 

 1. புலம்பெயர் தேசங்களில் வாழும் தேவையுள்ள மாணவர்களுக்கு உதவிகளை வழங்கல்
 2. தாயகத்தில் உள்ள தேவையுள்ள தமிழ் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கல்
 3. தாயகத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தல்

ஆவணக்காப்பகமும் நூல் நிலையமும்: 

 1. அ.த.க.மே.பேரவையின் எல்லாச்  செயல்பாடுகளையும் ஆவணப்படுத்தல்
 2. அ.த.க.மே.பேரவைக்கென இணையவழி நூல் நிலையம் ஒன்றை உருவாக்கலும் பேணிப்பாதுகாத்தலும்

பாடநூல்கள்