ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 21ஆம் நாளினைத் தாய்மொழி நாளாக ஐக்கிய நாடுகள் சபை - யுனசுகோ (UNESCO) அமைப்பு அறிவித்துள்ளது.
இதனையிட்டு, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தமிழ்மொழி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்;, பொதுமக்களிடம் தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை, எம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகள், தாய்மொழியும் தமிழர் தாயகமும், தாய்மொழியும் கலை பண்பாடும் ஆகிய விடயப்பரப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தேடலை அதிகரிக்கவும் அறிவைப் பெருக்குவதற்குமாகக் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை நடாத்துகிறது. போட்டி முடிவுநாள் 28.02.2022 ஆகும்.
இப்போட்டிகளில் வயதுப்பிரிவுகளின் அடிப்படையில் பங்குபற்ற விரும்புவோர் அனைவரும் பங்குபற்றலாம். விபரங்களை கீழுள்ள இணைப்புகளை அழுத்தித் தரவிறக்கம் செய்து அறிந்துகொள்ளலாம்.
அனைத்துலகத் தாய்மொழி நாள் 2022 - கட்டுரை கவிதைப் போட்டிகள்
அனைத்துலகத் தாய்மொழி நாள் - 2022 படிவம்
அனைவரையும் இப்போட்டிகளில் பங்குபற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.