மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

தமிழ்மொழித்தேர்வு சுவீடனில்

இன்று 2021 ஆம் ஆண்டு ஆனி மாதம் 12 ஆம் நாள் சனிக்கிழமை நேரம் 9 மணிக்குத் தொடங்கி 1 மணிவரை ஆண்டு 1 இல் இருந்து 12 வரை சிறப்பாக நடைபெற்றது. 60 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்ததால் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம். நன்றி.

இத்தாலியில் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2021

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையினால் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் இந்த ஆண்டு நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு இன்று, 12.06.2021 ஆம் நாள் இத்தாலியில் நாடுதழுவிய வகையில் 10 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ் ஆண்டு 1 தொடக்கம் பன்னிரண்டாம் ஆண்டு வரையில் கல்விபயிலும் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் தம் தாய்மொழியைக்கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவர்களை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் பெற்றோரைப் போற்றுகிறோம். நோய்த்தொற்றிலிருந்து […]

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு யேர்மனியில் நடாத்தப்பட்டது.

பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்குமென்பது பொய்யாமொழி அந்தவகையில் யேர்மனியில் தமிழாலயங்கள் மீண்டும் மிடுக்குடன்… அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பன்னாட்டளவில் நடாத்தப்படும் பொதுத்தேர்வு இன்று 12.06.2021 பல்வேறு நாடுகளில் சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனியின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தாய்மொழியைப் பயிலும் 4500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இத் தேர்வில் […]

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் புதிய பாடநூல்கள் வெளியீட்டு விழா. Germany தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க் கல்வியின் மேம்பாட்டுக்காக, புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் பயிலும் மூன்றாவது தலைமுறையினரின் தமிழ்மொழி ஆற்றலை இலகுவாக வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் புதிய தமிழ்ப் பாடநூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது. இன்றைய கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி இந் நிகழ்வு […]